search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிலையம்"

    • நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
    • ரோசாலியோ வில்லியம் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் அனை யேரி ஊராட்சியில் உள்ள சாலையை தரம் உயர்த்தி தார் சாலையாக அமைப்ப தற்கும் பூமி பூஜை விழா அனையேரி பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி ஆனந்தன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அனையேரி ரவி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் ஜெய பாலன், நெடுஞ்சா லைத்துறை உதவி பொறி யாளர் கிருஷ்ணகுமார் ஒன்றிய செயலாளர் விஜய ராகவன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய துணைச் செய லாளர்கள் குமார், தாட்சி யாணிகார்த்திகேயன் ஆவின் இயக்குனர் மாத்தூர் தாஸ் நிர்வாகிகள் எட்டி யான், தக்ஷிணாமூர்த்தி பாண்டுரங்கன், ரோசாலியோ வில்லியம் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

    • மண் திட்டுகள், தேவையற்ற சிமெண்டு சிலாப்புகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.
    • மராமத்து பணிகளை துரிதமாக செயல்படுத்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பஸ் நிலையத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் பஸ் நிலைய பகுதியில் இருந்த மண் திட்டுகள், தேவையற்ற சிமெண்டு சிலாப்புகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. ஆய்வின் போது, மராமத்து பணிகளை துரிதமாக செயல்படுத்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைஅடிவாரம் வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
    • திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் வாகனங்கள் வருவதால் நகரப் பகுதியில் குறிப்பாக பஸ் நிலையத்தில் இருந்து மலை அடிவாரம் வரை நெரிசல் ஏற்படுகிறது.

    இதனை தடுக்க திருப்பதி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.650 கோடி செலவில் ஸ்ரீனிவாச சேது என்ற பெயரில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஆட்சி மாறியதும் மறு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது.

    தற்போது ரூ.650 கோடி செலவில் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட உள்ளது. இதனை ஆந்திர முதல்- அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

    நாளை முதல் பொதுமக்கள் மேம்பாலத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர். திருப்பதி பஸ் நிலையத்தில் தொடங்கும் இந்த மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைஅடிவாரம் வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    இதன் மூலம் பக்தர்கள் எளிதில் கோவிலுக்கு சென்று வரலாம் இது குறித்து திருப்பதி மாநகராட்சி மேயர் சிரிஷா கூறுகையில்

    தினமும் ஒரு லட்சம் பக்தர்களும் உள்ளூர்வாசிகளும் இந்த மேம்பாலத்தை பயன்படுத்த உள்ளனர். இதன் மூலம் திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.

    இந்த மேம்பாலம் திருப்பதி நகருக்கே பெருமையை தேடி தரப் போகிறது என்றார். 

    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.
    • பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும். இந்த நிலையில் திங்கட்கிழமை பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சாஸ்தான்கோவில் பீடரில் மின்கம்பிகள் மாற்றும் பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    களியக்காவிளை, செப்.6-

    குழித்துறை கோட்டத்துக்குட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் சாஸ்தான்கோவில் பீடரில் மின்கம்பிகள் மாற்றும் பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மார்த்தாண்டம் காந்தி மைதானம், சந்தை, பேருந்து நிலையம், ெரயில் நிலையம், மதிலகம், செக்குமூடு, வால்குளம் பகுதிகளிலும் அதைச் சார்ந்த கிராமங்களிலும் மின் விநியோகம் இருக்காது. இந்த நேரத்தில் மின் கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் அகற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர்.

    பல்லடம், ஆக.22-

    பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு ரோட்டில் இறக்கி விடப்படுவதால் பயணிகள் அவதிபடுகின்றனர். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:- இரவு மற்றும் காலை நேரங்களில், திருச்சி, மதுரை போன்ற வெளியூர் செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.

    பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். இது ஒரு புறம் பயணிகளுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.

    • மேட்டூரில், ரூ.6.40 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது.
    • பஸ் நிலையம் எதிரே மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூரில், ரூ.6.40 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது. தற்போதைய பஸ் நிலையம் உள்ள இடத்திலேயே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ள நிலையில் அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டு, கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.

    தற்காலிக பஸ் நிலையம்

    இந்நிலையில் பஸ் நிலையம் எதிரே மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையம் என்றாலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் செயல்பட உள்ளது. ஆனால் அவசரமாக அமைக்கப்பட்டதால் போதுமான இட வசதியின்றி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் 15 முதல் 20 பஸ்கள் வரை மட்டுமே நிறுத்த முடிகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.

    பஸ்களுக்கான நிறுத்தங்கள் சரியாக ஒதுக்கப்படாததால் பஸ்கள் ஓட்டுநர்கள் சிரமம் அடைந்து வருகின்றன. அரசு நகரப் பஸ்கள் எங்கே உள்ளது என தெரியாமல் பயணிகள் அலைமோதுகின்றனர். அதேபோல, நிழற்குடை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே தற்காலிக பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

    • பஸ்நிலையத்தை சுற்றி உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்புகள் மற்றும் அதன் அகலம் மிகவும் குறுகலாக உள்ளன.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் பிரமாண்ட புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    இதில் வெளியூர் செல்லும் பஸ்களை நிறுத்தவும், பயணிகளுக்கும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழையின் போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய பகுதி மற்றும் நுழைவுவாயில், ஜி.எஸ்.டி.சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் பஸ்நிலையத்தை சுற்றி உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிகளின் நிர்வாக இணை இயக்குனர் ஜான் லூயிஸ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவும் வண்டலூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் முன்பு மீண்டும் மழை நீர் வெள்ளமாக தேங்கியது. முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் செல்ல வழியில்லாமல் நின்றது. இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. மழைநின்ற பின்னரே தண்ணீர் மெல்ல மெல்ல வடிந்தது. கிளாம்பாக்கம் பஸ்நிலையம் முன்பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் அங்கு உள்ள மழைநீர் கால்வாய் மிகவும் குறுகலாகவும் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு உள்ளதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுவதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    விரைவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும். ஒரு நாள் மழைக்கே தண்ணீர் தேங்குவதால் பருவ மழையின் போது பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலைய பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய மழை நீர்கால்வாய் அமைப்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ள பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மழைநீர் செல்லும் 4 கல்வெட்டுகளும் சிதலமடைந்து உள்ளது.

    தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்புகள் மற்றும் அதன் அகலம் மிகவும் குறுகலாக உள்ளன. எனவே சென்னை மாநகர வளர்ச்சி குழுமம் புதிதாக மழைநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ13 கோடியில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளது. அகலமான புதியகால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம் கிளாம்பாக்கம் பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் அந்த தண்ணீரை எதிரில் உள்ள ரெயில்வே பாதையை கடந்து அடையாறு ஆற்றுப்படுகையில் கலக்க திட்டம் தீட்டப்பட்ட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • பேரணி ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி காமராஜர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது

    கன்னியாகுமரி :

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. எழுச்சி பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேரணி நடத்தினர்.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூர் செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார். பேரணியை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் மகாராஜன், தாழக்குடி ரோகினி அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், தாழக்குடி நகர செயலாளர் பிரம்ம நாயகம் பிள்ளை, நகர அவைத்தலைவர் முத்துசாமி, கவுன்சிலர்கள் நவமணி, வளர்மதி, சுடலலையாண்டி, மோகன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை நிர்வாகி சங்கரலிங்கம், பேரவை சுந்தரம் பிள்ளை, நகர இணை செயலாளர் பேச்சியம்மாள், கச்சேரி நாகராஜன், சிவசங்கரன், மல்லிகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பேரணி ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி காமராஜர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் கையில் மாநாடு குறித்து விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்தி சென்றனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வண்டலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை கொட்டியது.
    • தண்ணீரை வடிகால்வாய் அமைத்து அடையாறு ஆற்று படுகையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட புறநகர் பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வெளியூர் செல்லும் பஸ்களை நிறுத்தவும், பயணிகளுக்கும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வண்டலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை கொட்டியது. அப்போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய பகுதி மற்றும் நுழைவுவாயில், ஜி.எஸ்.டி.சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் பஸ்நிலையத்தை சுற்றி உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூர் மேம்பாலம், தாம்பரம் பைபாஸ்சாலை, திருப்போரூர்-வண்டலூர் சாலை, மண்ணிவாக்கம் இணைப்பு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 3 மணிநேரத்துக்கும் மேல் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    ஒரு நாள்மழைக்கே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பகுதி மழைநீரில் தத்தளித்ததால் பொது மக்கள், வாகனஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மழை நீர்கால்வாய் அமைப்பது குறித்த ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை நகராட்சிகளின் நிர்வாக இணை இயக்குனர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். பஸ்நிலைய கட்டுமான பணி மற்றும் மழைநீர் கால்வாய் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது,சி.எம். டி. ஏ. அதிகாரி சீனிவாச ராவ், செயற்பொறியாளர் ராஜன் பாபு, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    தண்ணீரை வடிகால்வாய் அமைத்து அடையாறு ஆற்று படுகையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    • ஆண், பெண்களுக்கு என தனித்தனியே ஓய்வறை இருந்தது.
    • ஒரு சில பயணிகள் மட்டுமே இந்த ஓய்வு அறையை பயன்படுத்தி வந்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் ரூ.6 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது வடசேரி பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் மிக மோசமான நிலையில் காணப்பட்டது. அந்த இருக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிய இருக்கைகள் அமைக் கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரங்களை சீரமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக சென்னை போன்ற வெளியூர்களுக்கு செல்லும் பிளாட்பாரங்கள் சீர மைக்கும் பணி நடை பெற்றது.

    பிளாட்பாரத்தில் உள்ள தரைகள் அகற்றப்பட்டு புதிய தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரம் புத்தம் புதுபொலிவுடன் காட்சியளிக்கிறது. தற்பொ ழுது பஸ் நிலையத்தின் நடுவில் உள்ள பிளாட்பா ரத்தை சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது. இந்த பிளாட்பாரத்தின் தரைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. இந்த பிளாட்பாரத்தில் தான் பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஏசி ஓய்வறை ஒன்று இருந்தது. ஆண், பெண்களுக்கு என தனித்தனியே ஓய்வறை இருந்தது.

    இந்த ஓய்வறையில் கடந்த சில நாட்களாகவே குளிர்சாதன வசதி செயல்படாமல் இருந்தது. ஒரு சில பயணிகள் மட்டுமே இந்த ஓய்வு அறையை பயன்படுத்தி வந்தனர். இதனால் போதிய பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்தது. பஸ் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையடுத்து ஓய்வறையை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதையடுத்து நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பிளாட்பாரத்தில் இருந்த பயணிகளின் ஓய்வு அறை அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பிளாட்பாரத்தில் உள்ள தரைகளை அகற்றும் பணி இன்று காலை நடந்தது. இந்த பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் முடிவ டைந்ததும் கன்னியாகுமரிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் பிளாட்பா ரத்தின் வேலையை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நாகர்கோவில் பஸ் நிலையத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    எனவே அந்த ஓய்வ றையை மாற்றும்போது இட வசதி அதிகமாக கிடைக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தற்போது ஓய்வுஅறை அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பயணிகள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    பயணிகள் கூறுகையில், பஸ் நிலையத்தில் பயணி களுக்கு வசதியாக ஓய்வு அறை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்றனர்.

    • தியேட்டர் வசதியுடன் வணிக வளாகம் கட்டப்படுகிறது
    • 28 பஸ்கள் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், அண்ணா பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் உள்ளது. தற்பொழுது இந்த 3 பஸ் நிலையங்களையும் சீரமைக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் நவீன பஸ்நிலையம் அமைக்க ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து புதிதாக பஸ் நிலையம் அமைப்ப தற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி மேயர் மகேஷ் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நவீன பஸ் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். பஸ் நிலையத்தை பொறுத்தமட்டில் 4 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. 28 பஸ்கள் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பஸ்நிலையத்தின் மையப்பகுதியில் நான்கு மாடியில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. வணிக வளாகத்தில் தியேட்டர் அமைக்கலாமா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். மாநகராட்சி சார்பில் தியேட்டர் அமைக் கப்படும்போது பொதுமக்க ளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது அனை வரின் கருத்தாக உள்ளது. எனவே வெளியூர்களுக்கு இணையாக நாகர்கோவில் மாநகர பகுதியில் அமையும் வணிக வளாகத்திலும் தியேட்டர் அமைக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது.

    இது மட்டும் இன்றி வணிக வளாகத்தில் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் கடைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகத்தை குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். புதிய பஸ் நிலையம் அமையும் போது பொதுமக்களுக்கு மிகவும் பய னுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

    ×